பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினிகள் தயாரிக்க சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி

Added : மார் 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், பொதுமக்கள் கைகளை சுத்தமாக்கிக் கொள்ள தேவையான கிருமி நாசினியை தயாரிக்க, சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும், தங்களின் கைகளை, 30 நொடிகள் வரை, நாள் ஒன்றுக்கு, 15 முறை சுத்தமாக கைழுவ சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, இந்த கிருமி நாசினி வழங்க, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமை கூட்டரங்கில், கிருமி நாசினி தயாரிக்க, சுய உதவிக் குழுக்களை சேர்ந்த, 30 பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்காக, இரண்டு மருந்தாளுனர்கள், இரண்டு நுண்ணுயிரியல் நிபுணர்கள் குழுவினர் உதவியுடன், சுகாதாரத்துறை அறிவுரைப்படி குறிப்பிட்ட சதவீத நீர் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை கலந்து, தரமான கிருமி நாசினி தயாரித்து, அவற்றை தேவையான அளவு பாட்டல்களில் அடைத்து, தமிழக அரசின் வில்லைகள் ஒட்டி, அரசு அலுவலகங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரத்துறை ஒத்துழைப்போடு, சுய உதவிக்குழு பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினிகள், முதற்கட்டமாக கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, யூனியன் அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறோம். மேலும், அதிகளவில் உற்பத்தி செய்து, தேவையானவர்களுக்கு வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X