பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவையொட்டி உழவர் சந்தையில் குவிந்த மக்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால், நாடு முழுவதும் இன்று, ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மோடி அறிவித்துள்ளார். இதனால், தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், ஏ.ஜெட்டிஹள்ளி ஆகிய ஐந்து உழவர் சந்தைகளில், காய்கறி வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதில், தர்மபுரி உழவர் சந்தையில், 127 விவசாயிகள், 43 டன் காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். இதை, தர்மபுரி நகர்புறத்தை சேர்ந்த, 8,700 பேர் வாங்கிச் சென்றனர். இதன் மதிப்பு, 10 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயாகும். இதேபோல், பாலக்கோடு உழவர் சந்தைக்கு, 30 விவசாயிகள், 11 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதை, 2,858 பேர் வாங்கிச் சென்றனர். இதன் மதிப்பு, இரண்டு லட்சத்து, 7,235 ரூபாய் ஆகும். அரூர் உழவர் சந்தைக்கு, ஒன்பது டன் காய்கறிகளை, 32 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதை, 2,501 பேர் வாங்கிச் சென்றனர். இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 825 ரூபாய் ஆகும். பென்னாகரம் உழவர் சந்தைக்கு, 10 டன் காய்கறிகளை, 28 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதை, 2,544 பேர் வங்கிச் சென்றனர். இதன் மதிப்பு, இரண்டு லட்சத்து, 985 ரூபாய் ஆகும். ஏ.ஜெட்டிஹள்ளி உழவர் சந்தைக்கு, 12 டன் காய்கறிகளை, 37 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதை, 3,057 பேர் வாங்கிச் சென்றனர். இதன் மதிப்பு, இரண்டு லட்சத்து, 73ஆயிரத்து, 173 ரூபாய் ஆகும்.* மாவட்டம் முழுவதும் உள்ள ஐந்து உழவர் சந்தைகளுக்கு, 254 விவசாயிகள், 85 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதை, 19 ஆயிரத்து, 648 பேர் வாங்கிச் சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு, 19 லட்சத்து, 31 ஆயிரத்து, 218 ரூபாயாகும்.


* ஊரடங்கு உத்தரவால், நேற்று, திருவண்ணாமலையில், பஜார் வீதி, மற்றும் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட்டுகளில், அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் குவிந்தனர். மேலும், காய்கறிகள், நேற்று முன்தினம் விலையை விட, நேற்று இரு மடங்காக விற்பனை செய்யப்பட்டன. இதேபோன்று, வேலூரிலும் பஜார் வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வேலூரில், அண்டை மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என, ஆறு சோதனைச்சாவடிகளில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்கின்றனர். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும், வாகனங்களுக்கு வேலூர் மாவட்டத்திற்கு வர தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X