பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் 'கொரோனா' முன்னெச்சரிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன்களில், புகார், விசாரணைக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கை கழுவ விழிப்புணர்வு தகவல் ஒட்டப்பட்டுள்ளதுடன், சோப்பு, தண்ணீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு, கை கழுவி வர அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், ஒரு எஸ்.பி., அலுவலகம், நான்கு டி.எஸ்.பி., அலுவலகங்கள், 24 போலீஸ் ஸ்டேஷன்கள், நான்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் புகார்கள் தரவும், வழக்கு விசாரணைக்காகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தர்மபுரி எஸ்.பி., அலுவலகம் உட்பட மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி., அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் தர மற்றும் விசாரணைக்கு வருபவர்கள் கை கழுவும் வகையில் சோப்பு, கிருமி நாசினி, தண்ணீர் வைக்க, எஸ்.பி., ராஜன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அலுவலங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள் நுழைவாயிலில், சோப்பு, கிருமி நாசினி, தண்ணீர் வைக்கப்பட்டிருந்ததுடன், இது குறித்த விழிப்புணர்வு தகவலும் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, இங்கு வருபவர்கள் கொரோனா விழிப்புணர்வு படி, தங்களது கைகளை கழுவிய பின் போலீஸ் அலுவலங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்குள் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X