சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பணி பெற்று தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி: வாலிபர் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், அரசு பணி பெற்றுத் தருவதாக, 55 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், கெட்டூரை சேர்ந்தவர் முருகன், 34. பி.இ., பட்டதாரி. இவர், கடந்த, 2018ல் குரூப்-4 தேர்வு எழுத தயாராகினார். அப்போது, மணியம்பாடியை சேர்ந்த தன் நண்பர் சிவகுமார் மூலம், நல்லம்பள்ளி அடுத்த எரும்பட்டியான்கொட்டாயை சேர்ந்த சரவணன், 30, அறிமுகமாகினார். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று, அரசு பணி பெற தெரிந்தவர்கள் உள்ளனர் எனவும், பணம் கொடுத்தால் அரசு பணி ?பெற்றுத்தருவதாகவும் கூறினார். இதை நம்பிய முருகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேர், சரவணனிடம், 55 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், பணி பெற்று தராததுடன், பணத்தையும், சரவணன் திரும்ப தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து, முருகன் பலமுறை கேட்டும், பணம் கொடுக்க சரவணன் மறுத்துள்ளார். இதையடுத்து முருகன், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், இதுகுறித்து புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து, சரவணனை நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X