சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தையை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை

Added : மார் 22, 2020
Share
Advertisement

கடத்தூர்: கடத்தூர் அருகே, குருணை மருந்தை கொடுத்து ஒன்றரை வயது பெண் குழந்தையை கொன்ற கர்ப்பிணி தாயும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சப் - கலெக்டர் விசாரித்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த அய்யம்பட்டியை சேர்ந்தவர் மாயக்கண்ணன், 29, கார்ப்பெண்டர்; இவரது, மனைவி பவளக்கொடி, 24; இவர்களது, ஒன்றரை வயது மகள் ரித்திகா. மாயக்கண்ணன் சேலத்தில் பணியாற்றி வந்தார். வீட்டிற்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வார். தற்போது, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பவளக்கொடி, கடந்த சில நாட்களுக்கு முன், மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை, அவரது மாமியார் தெய்வானை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பவளக்கொடி, கடந்த, 19ல், குழந்தை ரித்திகாவுக்கு குருணை மருந்தை குடிக்கச்செய்து விட்டு, அவரும் குடித்துள்ளார். மயங்கிய அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை தாயும், மகளும் உயிரிழந்தனர். தாய், சேய் இறப்பு குறித்து, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பவளக்கொடிக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால், அரூர் சப் - கலெக்டர் பிரதாப் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X