பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுகள் வரும் ஜூன், 3ல் துவங்கி, 22 வரை நடக்கிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்குள்ள வெப் கேமிரா மூலம் புகைப்படம் எடுப்பதால், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, அங்கேயே தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த தேர்வரே நேரில் செல்ல வேண்டும். தேர்வு கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழுக்கு, 100 ரூபாயும், பதிவு மற்றும் சேவைக்கட்டணமாக, 15 ரூபாயும், ஆன் லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயும் செலுத்தி, விண்ணப்பங்களை மார்ச், 30 முதல் ஏப்., 4 வரை சமர்ப்பிக்கலாம். தகுதியற்றவர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள், கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X