பொது செய்தி

தமிழ்நாடு

தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்களுக்கு அறிவுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மோட்டார் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்க கட்டடத்தில், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜெயஜோதி தலைமை வகித்தார். இதில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் அமைய வேண்டும். பெயர் பலகையில் முதலாவதாக தமிழ் ஐந்து மடங்கும், இரண்டாவதாக ஆங்கிலம் மூன்று மடங்கும், மூன்றாவதாக பிற மொழிகள் இரண்டு மடங்கும் அமைய வலியுறுத்தப்பட்டது. அதன்படியே பெயர் பலகை அமைக்க வணிகர் சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X