பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு வந்தோரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரியில், கொரோனா பரவலை தடுக்க, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று சுற்றுலா வந்த பயணிகளை, அதிகாரிகள் மற்றும் போலீசார், தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.ஆந்திர மாநில எல்லையில், கிருஷ்ணகிரி அமைந்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநில அரசின் உத்தரவுப்படி, ஆந்திர மாநில எல்லையான காளிக்கோவில், வரமலைகுண்டா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, நேற்று முதல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த, சென்னையில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிலர், ஆந்திராவில் சுற்றுலா சென்று விட்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு காரில் சுற்றுலா வந்தனர். அவர்களை, தமிழக எல்லையான காளிக்கோவில் அருகே தடுத்து நிறுத்திய, பர்கூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர், மீண்டும் ஆந்திராவுக்கு திரும்பி அனுப்பினர். அதனால், சிறிது நேரம் போலீசார் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அரசின் உத்தரவை போலீசார் எடுத்துக்கூறி, சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர். அதேபோல், ஆந்திராவிலிருந்து வந்த அம்மாநில பஸ்கள், தமிழக எல்லையில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் திரும்பி சென்றன. தமிழக பஸ்களும் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X