சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்ற மூன்று பேர் சிக்கினர்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், லாட்டரி சீட்டு விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., செல்வராகவன் தலைமையிலான போலீசார், நேதாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த, நேதாஜி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 29, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 10 லாட்டரி சீட்டுகள், 2,000 ரூபாய் மற்றும் மொபைல்போனை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் ஸ்டேஷன் எஸ்.ஐ., விஜயவாணி தலைமையிலான போலீசார், வரட்டனப்பள்ளி பகுதியில் உள்ள பாரத கோவில் அருகே ரோந்து சென்றபோது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, வரட்டனப்பள்ளி கீழ் தெருவை சேர்ந்த புகழேந்தி, 49, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அன்ன சாகரம் பகுதியை சேர்ந்த அருண், 23, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 34 லாட்டரி சீட்டு மற்றும் 660 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X