பொது செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்குக்கு ஒத்துழைக்கும்படி அரசு பஸ்கள் இயக்கப்படும்'

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் இன்று காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு, மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ் இயக்கம் குறித்து, ஈரோடு மண்டல போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: அரசின் உத்தரவுப்படி, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், இரவில் டெப்போவுக்கு வந்ததும், அதன்பின், திங்கள்கிழமை காலையில் தான் இயங்கும். தொலை தூர பஸ்கள், மக்கள் வசதியை கருத்தில் கொண்டு சனிக்கிழமை இரவு, 10:00 முதல், 11:00 மணி வரை தொடரும். அவ்வாறு புறப்படும் பஸ்கள், மறு மார்க்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அல்லது டெப்போவுக்கு காலை, 5:00 மணிக்குள் சென்றடையும் வகையில் திட்டமிட்டுள்ளோம். எக்காரணம் கொண்டு ஞாயிறு காலை, 6:00 மணிக்கு இயங்காத வகையில் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் டிரைவர், கண்டக்டர்கள் காலை, 6:00 மணிக்கு முன்னதாக வீடுகளுக்கு செல்லும் வகையிலும், வெளியூர் ஊழியர்கள், அந்தந்த கிளைகளில் தங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். டெப்போ கேன்டீனில், தங்கி இருப்பவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X