பொது செய்தி

தமிழ்நாடு

'வீட்டுக்கு வராதீங்க; தாழ்மையான வேண்டுகோள்': வீட்டு வாசலில் 'பிளக்ஸ்' வைத்த வியாபாரி

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஈரோடு: கொரோனா' பீதிக்கு இடையே, 'வீட்டுக்கு வராதீங்க; தாழ்மையான வேண்டுகோள்' என, வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரி, தன் வீட்டின் வாசலில், 'பிளக்ஸ்' வைத்துள்ளார்.
ஈரோடு, காரைவாய்க்கால், பெரியார் வீதி பின்புறம் வசிப்பவர் பிரகாஷ் ஜெயின். இவர், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவர், தன் வீட்டு வாசலில். 'தாழ்மையான வேண்டுகோள்' என, பிளக்ஸ் வைத்துள்ளார். அதில், என் வீட்டுக்குள் வர, வரும் ஏப்., 14 வரை நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள், பிற நபர்களுக்கும் அனுமதி இல்லை. என் மொபைல் எண் மூலம் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதேநேரம், இத்தகைய சூழலில், என் வீட்டில் பணி செய்யும் மூன்று வேலையாட்களுக்கு விடுமுறை விடுத்து, என் வீட்டை கட்டுக்குள் வைத்துள்ளேன். அத்துடன், 1ம் தேதி வந்து மாத சம்பளத்தை பெற்று செல்ல கேட்டுள்ளேன். அவர்கள் ஏழ்மையானவர்கள். இதை காரணம் காட்டி, அவர்களது சம்பளத்தை நிறுத்தவில்லை. அவர்களுக்கு உதவுவது நமது கடமை. அவர்கள் என் வேலையாட்கள் அல்ல. அவர்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதியினர். எனவே, அதுபோன்றவர்களுக்கு அனைவரும் சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குங்கள் என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202018:12:26 IST Report Abuse
Ram Pollachi நம்மை விட இருபது, முப்பது வருடம் அட்வான்ஸாக இருக்கும் அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை அறிந்து இந்த தற்காப்பு நடவடிக்கையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X