தமிழ்நாடு

ஈரோடு ஜவுளி நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ''இன்று முதல் வரும், 31 வரை ஈரோட்டில் உள்ள, 2,100க்கும் மேற்பட்ட ஜவுளி, குடோன், அது சார்ந்த நிறுவனங்களுக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது,'' என, ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் பி.ரவிசந்திரன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரி, விளையாட்டு விடுதி, பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் வரும், 31 வரை ஜவுளி, குடோன்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் மூடப்படும், என அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் பி.ரவிசந்திரன் கூறியதாவது: ஈரோடு பகுதியில், 2,100 ஜவுளி மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், குடோன்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களுக்கு இன்று முதல் வரும், 31 வரை முழுமையாக விடுமுறை விடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனங்களிலும் தலா, ஐந்து முதல், 20 பேர் வரை பணி செய்கின்றனர். அவர்களுக்கும் விடுமுறை விடுக்கப்படுகிறது. மொத்தம், 25 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பணி செய்வர். சாதாரணமாக மாதம், 1,000 கோடி ரூபாய் வரை பல்வேறு நிலைகளில் ஜவுளி, துணிகள், ஆயத்த ஆடை உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான துணிகள் விற்பனை செய்யப்படும். கொரோனா வைரஸ் தாக்கத்தால், உற்பத்தி நிறுத்தப்படவில்லை. ஆனால், பிற மாநிலங்களுக்கு அனுப்புவது, புதிய ஆர்டர் பெறுவது, பண பரிவர்த்தனையை சரியான நேரங்களில் தொடர்வது தடைபட்டுள்ளது. இந்நிலையில், விசைத்தறி கூடங்கள், காடாத்துணியை பிற வடிவில் மாற்றும் பிளீச்சிங், டையிங், பிரின்டிங் உள்ளிட்ட அனைத்து ஆலைகளும் மூடப்பட்டதால், எங்களுக்கான பணிகளும் குறைந்துள்ளது. அரசின் அழைப்பை ஏற்று, வரும், 31 வரை விடுமுறை விடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

விசைதறி கூடங்களுக்கு விடுமுறை: வெள்ளகோவில் வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் தலைவர் லோகநாதன் தலைமையில் நடந்தது. இதில் கொரோனா வைரஸ் நோய் காரணமாக அரசின் நடவடிக்கைகளுக்கு இணங்க, வெள்ளகோவில் வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அனைவரும் நேற்று முதல் வரும், 31 வரை கொரோனா வைரஸ் நோயில் இருந்து, நம்மை நாமே பாதுகாத்து கொள்வதற்காக, விசைதறி கூடங்களுக்கு விடுமுறை விடுவதாக முடிவு செய்துள்ளனர்

அரிசி ஆலைகள் இன்று அடைப்பு: திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராமசாமி வெளியிட்டுள்ள அரறிக்கை: பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, மத்தியமாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று ஒரு நாள் மட்டும் காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X