பொது செய்தி

தமிழ்நாடு

மாநில எல்லையில் படிப்படியாக வாகன போக்குவரத்து நிறுத்தம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஓசூர்: கர்நாடகா - தமிழக எல்லையில் நேற்று, தெர்மல் ஸ்கேனர் மூலம், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், நேற்று மாலை படிப்படியாக வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டு, கர்நாடகாவுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மாநில எல்லையில் உள்ள ஓசூர் வழியாக, கொரோனா பரவாமல் தடுக்க, கடந்த, 14 முதல், மாநில எல்லையான ஜூஜூவாடி, நல்லூர், கக்கனூர், டி.வி.எஸ்., சம்பங்கிரி, அச்சுப்பள்ளி, பூனப்பள்ளி, கும்ளாபுரம், தக்கட்டி என மொத்தம், ஒன்பது சோதனைச்சாவடிகள் உட்பட மொத்தம், 16 இடங்களில், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப் படுகின்றன. இந்நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளை மூட, தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று காலை முதல், கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வந்த வாகனங்களை, போலீசார், போக்குவரத்து, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கர்நாடகா மாநில, பஸ் போக்குவரத்தை நிறுத்த முயன்றபோது, ஓசூருக்கு பயணிகள் பலர் வந்ததால், அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்களில் வந்த பயணிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம், காய்ச்சல் அறிகுறி உள்ளதா என, பரிசோதனை செய்யப்பட்டது. போதிய கருவி இல்லாமல், பரிசோதனைக்கு காலதாமதமாகி, ஜூஜூவாடியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தமிழர்கள் பலர், சொந்த ஊர் திரும்பியதால், கூட்ட நெரிசலை தவிர்க்க, 250 பஸ்கள் வழக்கம் போல், கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன. அதன் பின், படிப்படியாக வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டு, நேற்று மாலைக்கு பின், தமிழக எல்லை மூடப்பட்டு, அத்தியாவசிய தேவைகள் கொண்ட வாகனங்கள் மட்டும், கர்நாடகா, ஆந்திராவிலிருந்து அனுமதிக்கப்பட்டன, மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X