வாகன சோதனையின் போது பைக் மோதி எஸ்.எஸ்.ஐ., காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன சோதனையின் போது பைக் மோதி எஸ்.எஸ்.ஐ., காயம்

Added : மார் 22, 2020
Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பாலாஜி, 55. இவர் கடந்த, 19 இரவு, 11:30 மணிக்கு, பேரிகையில் உள்ள மாஸ்தி சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன், பேரிகை ஸ்டேஷன் பெண் காவலர் கண்ணகி மற்றும் ஊர்காவல் படையில் பணியாற்றும் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த, ஓசூர் பதிவு எண் கொண்ட ஸ்பிளண்டர்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பாலாஜி, 55. இவர் கடந்த, 19 இரவு, 11:30 மணிக்கு, பேரிகையில் உள்ள மாஸ்தி சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன், பேரிகை ஸ்டேஷன் பெண் காவலர் கண்ணகி மற்றும் ஊர்காவல் படையில் பணியாற்றும் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த, ஓசூர் பதிவு எண் கொண்ட ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தினர். பைக்கில் வந்த, பேரிகையை சேர்ந்த நரசிம்மன், 22, எஸ்.எஸ்.ஐ., பாலாஜி மீது பைக்குடன் மோதினார். இதில், படுகாயம் அடைந்த எஸ்.எஸ்.ஐ., பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கும் பின், மேல்சிகிச்சைக்காக, பெங்களூருவும் அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, பெண் காவலர் கண்ணகி புகாரின்படி, பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X