சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வதந்தி பரப்பியவர் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஓசூர்: கொரோனா வதந்தி பரப்பிய, விவசாயி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் மக்கள் உள்ளனர். அதனால், சமூக வலைதளங்களில் கொரோனா வதந்திகளை பரப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னகொத்தூரை சேர்ந்த விவசாயி சண்முகம், 35, கொரோனா தொடர்பான வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினார். அதில், சூளகிரி அருகே உள்ள, தனியார் நிறுவனத்தில், அதிகமானோர் பணியாற்றுவதால், கொரோனா பரவி விடும் என்றும், விடுமுறை அளிக்கவில்லை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி, சைபர் கிரைம் பிரிவு எஸ்.ஐ., அருள் புகாரின்படி, நேற்று முன்தினம் மாலை, சண்முகத்தை சூளகிரி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X