பொது செய்தி

தமிழ்நாடு

'ஆவின் பால் வினியோகத்துக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை'

Added : மார் 22, 2020
Share
Advertisement

சேலம்: ஆவின் பால் வினியோகத்துக்கு இடையூறு செய்ய முயற்சிப்பவர் மீது, போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் விஜய்பாபு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக அரசின், சேலம் ஆவின் நிறுவனம், மார்ச், 22ல்(இன்று), வழக்கம்போல் ஆவின் பால் வினியோகம் செய்யும். இந்நிறுவனம், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில், அத்தியாவசியப்பொருளான பாலை வினியோகிக்கிறது. அனைத்து ஆவின் பாலகங்களிலும், வினியோகஸ்தர் மூலம், பால் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்தியை, மக்கள் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புபவர் மீதும், பால் வினியோகத்துக்கு இடையூறு செய்ய முயற்சிப்பவர்கள் மீதும், போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X