தமிழ்நாடு

'கொரோனா'வால் மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு; மெக்னீசியம் சல்பைட் ஆலைகளில் உற்பத்தி சரிவு

Added : மார் 22, 2020
Share
Advertisement

மேட்டூர்: 'கொரோனா வைரஸ்' எதிரொலியாக, சீனாவிலிருந்து மூலப்பொருள் வரத்து குறைந்ததால், மேட்டூரில், மெக்னீசியம் சல்பைட் ஆலைகளில், உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் சிட்கோ வளாகத்தில், மெக்னீசியம் சல்பைட் உரம் தயாரிக்கும், 40 ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகள், சேலம் டால்மியா, தமிழ்நாடு மேக்ன சைட் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து, மெக்னீசியம் கார்பைட் கொள்முதல் செய்தன. அந்த நிறுவனங்கள் மூடப்பட்டதால், சமீபகாலமாக சீனாவிலிருந்து மாதம், 5,000 டன் மெக்னீசியம் ஆக்?ஸட் கொள்முதல் செய்து உரம் தயாரிக்கின்றன. அங்கு, கொரோனா வைரஸ் பரவியதால், ஒரு மாதமாக, சிட்கோ ஆலைகளுக்கு, மெக்னீசியம் ஆக்?ஸட் வரவில்லை. இதனால், ஆலைகளில் இருப்பு வைத்திருந்த ஆக்?ஸடை பயன்படுத்தி, உரம் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து, மேட்டூர் சிறு தொழிலதிபர்கள் சங்கத்தலைவர் மாதப்பன் கூறியதாவது: மெக்னீசியம் ஆக்ஸைட் வராததால், சிட்கோவிலுள்ள ஆலைகளில் உற்பத்தி குறைந்துவிட்டது. தினமும், 700 டன் உற்பத்தி செய்யும் ஆலைகளில், தற்போது, 300 டன் மெக்னீசியம் சல்பைட் உரமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாதத்துக்கு பின், மார்ச், 21ல்(நேற்று), முதல்கட்டமாக, 260 டன் ஆக்ஸைட், சீனாவிலிருந்து, மேட்டூர் சிட்கோ ஆலைக்கு வந்துள்ளது. எனினும், தொடர்ச்சியாக வருமா என தெரியவில்லை. இதனால், ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, உரிமையாளர்கள் அரசுக்கு ஜி.எஸ்.டி., வரியை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு, எங்கள் நிலையை உணர்ந்து, ஜி.எஸ்.டி., வரி செலுத்த, கால அவகாசம் வழங்க வேண்டும். மெக்னீசியம் சல்பைட் உரம் விவசாயத்துக்கு பயன்படுவதால், 'வாட்' வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி.,யில், 12 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வரியை, 5 சதவீதமாக குறைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆறாக ஓடிய 'ஆசிட்': மேட்டூர், சிட்கோ வளாகத்தில், 'சீனிவாசா' மெக்னீசியம் சல்பைட் உரம் தயாரிக்கும் ஆலை உள்ளது. அங்கு, உரம் தயாரிக்க, ஸ்பென்ட் சல்பரிக் ஆசிட், ஒரு தொட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, அத்தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, ஆசிட் வெளியேறி சிட்கோ வீதியில் ஆறாக ஓடியது. இதையறிந்த நிர்வாகத்தினர், வீதியில் செல்லாமல் இருக்க, ஆலை அருகே, பள்ளம் தோண்டி ஆசிட்டை தேக்கினர். வீரியம் குறைந்த ஆசிட் என்பதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X