சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒற்றை யானை அட்டகாசம்; பயிர்கள் சேதம்; மக்கள் அவதி

Added : மார் 22, 2020
Share
Advertisement

குடியாத்தம்: குடியாத்தத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒற்றை யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டிய, ஆந்திரா கவுண்டன்ய யானைகள் சரணாலயத்தில், 40க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை, அடிக்கடி குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டிய, விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், வனத்துறையினர், 15 யானைகள் கொண்ட யானை கூட்டத்தை ஆந்திர மாநில எல்லைக்கு விரட்டினர். ஆனாலும், அவை மீண்டும் தமிழக எல்லையிலுள்ள கிராம விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் பல நாட்கள் போராடி, குடியாத்தம் அடுத்த பரதராமி, கந்தல்செருவு, மற்றும் சைனகுன்டாவை அடுத்த கொதலமடுகு பகுதிக்கு விரட்டினர். இந்த யானை கூட்டத்திலிருந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற ஒற்றை யானை, மோர்தானா மற்றும் பரதராமியை அடுத்த கொத்தூரில் விளை நிலங்களுக்குள் புகுந்து, சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, ஜங்காலபள்ளியில், நெற்பயிர் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியது. குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் பிரகாசம் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து அந்த யானையை பல மணி நேரம் போராடி வனத்துக்குள் விரட்டினர். விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதம் குறித்து, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யானையை ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X