பொது செய்தி

இந்தியா

கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500; கட்டணம் நிர்ணயித்தது மத்திய அரசு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்ததை அடுத்து, பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.4500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக , சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்களும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்கின்றனர். தற்போது அரசு மருத்துவமனை ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாடுமுழுவதும் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரிக்கும் நோக்கில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வு கூடங்களை அமைத்து கொரோனா பரிசோதனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த சோதனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நெறிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும் எனவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


latest tamil news


கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.4,500 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு ஆரம்பக்கட்ட சோதனைக்கு ரூ.1,500ம், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தும் சோதனைக்கு ரூ.3000ம் வசூலிக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலவசமாகவோ அல்லது நிர்ணயித்த அளவைவிட குறைந்த கட்டணத்திலோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், ரத்த மாதிரிகளை பெற்ற நபர்களின் விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202006:58:34 IST Report Abuse
ஆப்பு பெட்ரோல் விலையிலேயே உருவறவங்க, இதிலே சும்மா இருப்பாய்ங்களா?
Rate this:
Cancel
Francis - Denpasar,இந்தோனேசியா
23-மார்-202005:40:05 IST Report Abuse
Francis மற்ற நாடுகள் இலவசமாக மக்களுக்கு சிகிச்சை தரும்போது இந்தியா மட்டும் மக்களை ஏன் இப்படி கஸ்ட்டப்படுத்துது. நிர்மலா சீதாராமன் ஒதுக்கிய பணம் அரசியல்வாதிகளுக்கு ஒதிங்கிவிட்டதா ? சபாஸ் புதிய இந்தியா கார்பொரேட் மூளை மக்களை பயப்படுத்தி சம்பாதிக்க அரசின் கூட்டு முயற்சி. மக்களே சிந்தியுங்கள். எந்த நோய்க்கும் ஒரு தீர்வு உண்டு . இயற்கையான உணவு, நாட்டு மருந்து, ஆரோக்கியமான பயமற்ற வாழ்க்கை மட்டுமே தீர்வு.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
23-மார்-202001:51:07 IST Report Abuse
Murthy இவ்வளவு தொகை நிர்ணயித்தால், யாரும் பரிசோதனை செய்துகொள்ள மாட்டார்கள், இது நோயை பரப்புவதற்கு வழிவகுக்கும். அரசு அணைத்து மாவட்ட மருத்துவமனைகளில் பரிசோதனை மையம் அமைக்கவேண்டும்.
Rate this:
natarajan s - chennai,இந்தியா
23-மார்-202007:40:32 IST Report Abuse
natarajan sஅரசு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை கட்டணம் இல்லாமல்தான் உள்ளது. தனியாக LAB மற்றும் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன அரசு மருத்துவமனைகளை நாடாத தனியார் மருத்துவமனைகளை நாடும் மக்களுக்குத்தான் இந்த பரிசோதனைக்கு கட்டணம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X