பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.13.93 லட்சத்துக்கு விற்பனை

Added : மார் 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், இரு நாட்களில், 13.93 லட்சம் ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகின.
'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும், பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்கள் ஆகியவற்றில், பக்தர்கள், பொதுமக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கால்நடை சந்தைகள், வாரச்சந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், வணிக நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், காய்கறி கடைகள் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடைகளில், பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், நாமக்கல் உழவர் சந்தையில் கடந்த, இரண்டு நாட்களாக, காய்கறி, பழங்கள் வாங்குவதற்காக, திருவிழா கூட்டம் போல் மக்கள் குவிந்தனர். அதனால், காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம், 17 ஆயிரத்து, 175 கிலோ காய்கறிகள், 3,030 கிலோ பழங்களை, 165 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அவற்றை, 4,920 வாடிக்கையாளர்கள், ஐந்து லட்சத்து, 57 ஆயிரத்து, 725 ரூபாய்க்கு வாங்கிச் சென்றனர். அதேபோல், நேற்று, 26 ஆயிரத்து, 420 கிலோ காய்கறிகள், 3,750 கிலோ பழங்கள், 259 விவசாயிகள் கொண்டு வந்தனர். அவற்றை, 7,540 வாடிக்கையாளர்கள், எட்டு லட்சத்து, 35 ஆயிரத்து, 530 ரூபாய்க்கு வாங்கி சென்றனர். இரண்டு நாட்களில் மட்டும், 13 லட்சத்து, 93 ஆயிரத்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், 'இன்று முதல், மறு உத்தரவு வரும் வரை, நாமக்கல் உழவர் சந்தை இயங்காது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X