பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 'கொரோனா' தனி வார்டு

Added : மார் 22, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், அரசு மருத்துவமனையில், 'கொரோனா' சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நோயாளிகள், உடன் தங்குபவர்கள், வெளி நோயாளிகள் என அனைவரிடமும், 'கொரோனா' வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறோம். மருத்துவமனைக்கு வருபவர்கள் கைகளை கழுவி விட்டு உள்ளே வர இரு இடங்களில் தண்ணீர், சோப் வைக்கப்பட்டுள்ளது. தீவிர கொரோனா அறிகுறியுடன் யாரும் இதுவரை வரவில்லை. கொரோனா பாதிப்பு குறித்து நாடே பிரசாரம் செய்து வரும் வேளையில், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, சத்து ஊசி போட்டுக்கொள்ளுதல், அதிக வேலை பளு காரணமாக உடல் வலி போன்ற சாதாரண சிகிச்சை வகைகளுக்கு பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வராதிருக்க வேண்டும். நீங்கள் தரும் ஒத்துழைப்பால் அதிக கூட்டம் சேராமல் கொரோனா பரவாதிருக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X