பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

மண்சாலையால் மக்கள் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையம் அண்ணாநகரில், குடியிருப்புகள் அருகே பல வருடங்களாக மண் சாலை உள்ளது. பலத்த காற்று வீசும்போது, சாலையில் படிந்திருக்கும் புழுதி மண் குடியிருப்புகளுக்குள் புகுந்து குடியிருப்பை நாசம் செய்து விடுகிறது. அதுமட்டுமின்றி, மழைக் காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தார்ச்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.
மண், ஜல்லியால் போக்குவரத்து பாதிப்பு: ராசிபுரத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில், ஆண்டகலூர் கேட்டை தாண்டி குருக்கபுரம் உள்ளது. இங்கிருந்து காலனிக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக சாலையோரம் மண், ஜல்லிக் கற்களை கொட்டியுள்ளனர். இதனால், அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வேலை செய்யும் நாளன்று மண், ஜல்லியை வாங்கினால், இந்த பிரச்னை ஏற்படாது என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

மின் பெட்டியை அகற்ற வேண்டும்: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரத்தில் இருந்து, வாழப்பாடி செல்லும் வழியில் உள்ள பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. இதனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங்க் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது, ஆழ்துளை கிணறு வறண்டு, சின்டெக்ஸ் டேங்க் பயனற்றுள்ளது. மின்பெட்டியும் இடையூறாக உள்ளது. மின்பெட்டி, சிமென்ட் மேடையை அகற்ற வேண்டும்.

பெருக்கெடுக்கும் சாயக் கழிவுநீர்: குமாரபாளையம், ஆனங்கூர் சாலை கோட்டைமேடு பிரிவு அருகே உள்ள பாலம் பகுதியில் அதிக குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பள்ளத்தில் சாயக் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் துர்நாற்றம் மக்களிடையே அவதியை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீரில் சாயநீர் கலந்ததாக சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

சாலையோரத்தில் சுகாதாரம் தேவை: பள்ளிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலக பின்புறத்தில் செல்லும் சாலையோரத்தின் இருபுறத்திலும் கழிவுகள், குப்பை அதிகளவு உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. திறந்தவெளியை கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். எனவே, இங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு, எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை? எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லையென, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X