பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம், மங்களபுரத்தில் 'கொரோனா' விழிப்புணர்வு

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரத்தில் நடந்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணியில் திரளான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர். ராசிபுரம், புது பஸ் ஸ்டாண்ட் முன், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், 'கொரோனா' தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி நடந்தது. சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் சுந்தரம், நகர்மன்ற முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், நகராட்சி ஆணையாளர் நடேசன், சுகாதார அலுவலர் பாலசுந்தரராஜூ, வட்டார மருத்துவ அலுவலர் செல்வி ஆகியோர் பேசினர். கொரோனா நோய் தடுப்பு முறை, கை கழுவுதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை குறித்து சுகாதாரத்துறையினர் விளக்கமளித்தனர். விழிப்புணர்வு பேரணியில், நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* மங்களபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வடிவேலன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பெரியசாமி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் சுந்தரம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X