பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா'வை விட வரி முக்கியம் மக்களே: ராசிபுரம் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராசிபுரம்: 'கொரோனா'வை தடுக்க பல்வேறு ஏற்பாடுளை அரசு செய்து வரும்நிலையில், வரி கட்டுவது குறித்து, ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'கொரோனா' பாதிப்பு உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 'இன்று ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்' என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை வலியுறுத்தி, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில், இன்று நடக்கவுள்ள ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தவிர்த்து, 'வரி கட்ட வேண்டும்' என, விளம்பரப்படுத்தி வருகின்றனர். அதுவும், பொதுமக்கள் வரி கட்ட வசதியாக, 'சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், நகராட்சி அலுவலகம் திறந்திருக்கும்' என, தெரிவித்து வருகின்றனர். இதனால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஊரடங்கு தினமான இன்று, நகராட்சி அலுவலகம் திறந்திருக்குமா, வரி கட்டமுடியுமா என்று சந்தேகம் அடைந்துள்ளதோடு, நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தபோது, 'கொரோனா பாதிப்புக்கு முன்பிருந்தே, விடுமுறை தினத்தில் வரி கட்டலாம் என, விளம்பரம் செய்து வந்தோம். தற்போதும் அதைத்தான் செய்கிறோம். 'கொரோனா' பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X