பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஊரடங்கை கடைப்பிடிக்க நாமக்கல் கலெக்டர் வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'கொரோனா' தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, நாமக்கல் மாவட்ட மக்கள், இன்று, காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு வெளியே வராமல், சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்தோர், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலம் சென்று வந்த, நான்கு பேர், நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு, சளி, காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. ஒன்பது அரசு மருத்துவமனைகள், மூன்று தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க வசதியாக, 140 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X