பொது செய்தி

தமிழ்நாடு

'4.50 லட்சம் லாரிகள் இன்று இயங்காது'

Added : மார் 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''தமிழகம் முழுவதும் இன்று, 4.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'கொரோனா வைரஸ்' தாக்குதலில் இருந்து மக்களை காக்க அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, தமிழகத்தில், இன்று காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, 4.50 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் நிறுத்தப்படும். இதனால், 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே, பல்வேறு இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிற லாரி தொழில், சரிவில் இருந்து மீள, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி தொழில் வளர்ச்சிக்கு, நாங்கள் பெற்றுள்ள கடன் தொகைக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் பேசி, தவணை காலத்தை தள்ளி வைக்க வேண்டும். உரிய வட்டிகளை செலுத்தி விடுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X