பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் ரயில் ரத்து

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
IndianRailway, CoronaOutBreaks, CoronaVirus, PassengerRails, இந்திய ரயில்வே, கொரோனா, வைரஸ், ரத்து,

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மார்ச் 31 வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை 'காவு' வாங்கி வருகிறது. உலக அளவில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கபட்டு, 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


latest tamil news



அதன்படி, இன்று (மார்ச் 22) காலை 7 மணி முதல், இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மார்ச் 31ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் சரக்கு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202019:59:39 IST Report Abuse
ஆப்பு மேல்தட்டு மக்களுக்கு கவலையில்லை. கொஞ்சம் ஐஸ்கிரீம் தான் கிடைக்காது. பீதி வேண்டாம்.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
23-மார்-202000:04:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும்சுடலைக்ககான் தன சொந்த செலவில் கட்சிக்காரர்களை தேவை படும்போது இனாமாக ஊருக்கு தன்னோட ஊர்தியில் அனுப்ப சொல்லு.. கொஞ்சமாவது வாழ்க்கையில் புண்ணியம் செய்யட்டும் ....
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-மார்-202019:41:37 IST Report Abuse
K.Sugavanam சரக்கு ரெயில் நிறுத்தம் நாட்டில் பரவலாக அத்யாவசிய பொருள், நிலக்கரி, எரிபொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கும்..யோசித்து முடிவை தளர்த்த வேண்டும்.. உரிய நோய்த்தடுப்பு முறைகளுடன் தொடர்வதே நல்லது..
Rate this:
Cancel
22-மார்-202017:51:16 IST Report Abuse
Ram Pollachi காஷ்மீரிலிருந்து கன்னியாகுமாரி வரை இலவச பயணம் செய்யும் கொரோனாவிற்கு தடை. அமைதியாக வீட்டில் இருந்தால் இரயில் கட்டணம் திரும்பி கிடைக்கும் இல்லாட்டி சிவலோம், வைகுண்டத்திற்கு வாய்ப்பு அதிகம். போகப் போக தெரியும் கொரோனாவின் மகிமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X