பொது செய்தி

தமிழ்நாடு

கொள்முதல் விலை சரிவு: நுகர்வு அதிகரிப்பு: முட்டை இருப்பு பாதியாக குறைந்தது

Added : மார் 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால், நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, பண்ணைகளில் தேக்கமடைந்த முட்டை, 10 கோடியாக குறைந்துள்ளது.
'கொரோனா வைரஸ்' தொற்று, கோழிகளில் பரவியதாக, 'வாட்ஸ் ஆப்பில்' வைரலாக பரவியதை அடுத்து, மக்கள் பீதி அடைந்ததுடன், முட்டை, கோழி இறைச்சியை தவிர்த்தனர். அதனால், அதன் நுகர்வு சரிந்து, முட்டை கொள்முதல் விலை, தற்போது, 195 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தும், 125 முதல், 150 காசுக்கே, பண்ணைகளில் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த விலை சரிவால், பண்ணைகளில், 20 கோடி முட்டைகள் தேக்கமடைந்து, பண்ணையாளர்களுக்கு, தினமும், எட்டு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், நுகர்வு அதிகரித்து, தேக்கமடைந்த முட்டைகள், பாதியாக குறைந்துள்ளன.

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால், நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், பண்ணைகளில், 20 கோடி அளவுக்கு தேங்கியிருந்த முட்டைகள், தற்போது, 10 கோடி அளவுக்கு குறைந்துள்ளன. கேரளாவுக்கு வழக்கம் போல் முட்டை அனுப்பப்படுகிறது. பண்ணைகளில், 125 காசுக்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால், வெளியில் சில்லரை விற்பனை, 350 முதல், 400 காசுக்கு விற்பனை செய்கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் ஆரணியில் கடை போட்டு, ஒரு முட்டை, 200 காசுக்கு விற்பனை செய்தார். ஆனால், அங்குள்ள வியாபாரிகள் விற்பனை பாதிப்பதாக கூறி கடையை மூடி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்தபோது, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X