உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டுகோள்| Dinamalar

உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share

குமாரபாளையம்: குமாரபாளையம், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில், ஐந்து சாலை சந்திப்பு உள்ளது. ஈரோடு, பள்ளிபாளையம், பவானி, கோவை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த இடத்தில் தாறுமாறாக செல்லும் நிலை உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படுகின்றனர். புறவழிச்சாலை மையப்பகுதி இந்த இடத்தில் அடைக்கப்பட்டதால், டீச்சர்ஸ் காலனி செல்லும் சர்வீஸ் சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் பவானி செல்கின்றன. இந்த பகுதியில் ரவுண்டானா, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X