பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: வெற்றிலை தேக்கம்; விலை சரிவு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக, வெளி மாநிலங்களுக்கு, வெற்றிலை அனுப்புவது குறைந்துள்ளது. இதனால், வெற்றிலை தேக்கம் ஏற்பட்டுள்ளதால், விலை குறைந்துள்ளது.
கரூர் மாவட்டம், புகளூர் வட்டார பகுதிகளான நொய்யல், வேலாயுதம்பாளையம், தளவாப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடக்கிறது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர் வட்டார பகுதிகளில், 5,000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த, ஐந்து நாட்களாக வெளி மாநிலங்களுக்கு வெற்றிலையை அனுப்ப முடியாமல், தேக்கம் அடைந்துள்ளது. இதனால், வெற்றிலையின் விலை குறைந்து வருகிறது.

இதுகுறித்து, புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், போதிய மழை பெய்ததால், வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிகம் உள்ள நிலையில், ஒரு சுமை வெற்றிலைக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை விலை அதிகரித்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெற்றிலையை அதிகளவில் பயன்படுத்தும், வட மாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால், வெற்றிலை தேங்கியுள்ளது. மேலும், வாரச்சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூரில் மட்டும் வெற்றிலை விற்பனை செய்யப்படுவதால், விலை குறைந்து வருகிறது. 104 கவுளிகள் (ஒரு கவுளிக்கு, 100 வெற்றிலை) கொண்ட, ஒரு சுமை வெற்றிலை கடந்த தை, மாசி மாதங்களில், 6,000 ரூபாய் வரை விற்றது. தற்போது, 3,000 ரூபாயை தாண்டவில்லை. வரும், 31 வரை தடை நீடிக்கும் பட்சத்தில், அதல பாதாளத்துக்கு வெற்றிலை விலை சென்று விடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X