பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தை மூடல்: சாலையில் விற்பனை

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கரூர் உழவர் சந்தை மூடப்பட்டது. இதனால், விவசாயிகள் சாலையில் வைத்து காய்கறிகளை விற்பனை செய்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுகளில் காய்கள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகாலை முதல் குவிந்தனர். ஆனால், கரூர் உழவர் சந்தை மூடப்பட்டதால், திருச்சி சாலையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்து காய்களை விற்றனர். காலை, 9:00 மணிக்குள் பெரும்பாலான காய்கள் விற்று தீர்ந்தன. மேலும், அனைத்து காய்களுக்கும் சராசரியாக, ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை, ஒரு கிலோவுக்கு அதிகரித்து காணப்பட்டது.

மாட்டு சந்தை மூடல்: கரூர் அருகே, உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும், சனிக்கிழமை இரவு மாட்டு சந்தை துவங்கி, ஞாயிறு இரவு வரை நடக்கும். ஆனால், நடப்பு வாரம் மாட்டு சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், தடையை மீறி, மாட்டு சந்தையில் இரவு நேரத்தில் விற்பனை நடக்க உள்ளதாக, தகவல் பரவியது. இதனால், உப்பிடமங்கலத்தில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும், மாட்டு சந்தை விடுமுறை என போர்டும் வைக்கப்பட்டது.

ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்க கோடு: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் டிக்கெட் வழங்கவும், முன்பதிவு செய்யவும் தனித்தனியாக, கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இரண்டு அடி தூரத்தில் கோடு வரையப்பட்டு, அதில் தள்ளி நின்று பொதுமக்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X