பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 'கொரோனா வைரஸ்' நோய்த் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். கரூர், தொழில்கள் நிறைந்த மாவட்டம். 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர், 60 வயதினை கடந்த முதியவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த அத்தியாவசிய தேவைகள் தவிர பிற அனைத்து நிறுவனங்களும் வரும், 31 வரை தற்காலிகமாக மூடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X