பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை விற்பனை: கரூரில் அமோகம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: வடகிழக்கு பருவ மழை காரணமாக, நிலக்கடலை சாகுபடி, கரூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில், கடவூர், கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை மற்றும் கரூர் வட்டாரங்களில், மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும், வடகிழக்கு பருவ மழையை கணக்கில் கொண்டு, நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். கடந்தாண்டு, அக்டோபர் முதல், மழை பெய்ய துவங்கியதால், மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி விறுவிறுப்பாக நடந்தது. தற்போது, அறுவடை துவங்கிய நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலக் கடலை விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. ஒருபடி, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு, மார்ச் மாதம் நிலக்கடலை வரத்து குறைவால், ஒரு படி, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, நிலக்கடலை விலை குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X