பொது செய்தி

தமிழ்நாடு

கூலிங்கிளாஸ் விற்பனை அதிகரிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கூலிங்கிளாஸ் விற்பனை, படு ஜோராக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடைக்காலத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஆனால், நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்து தமிழகத்தில், கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பகல் நேரத்தில் டுவீலர்களில் செல்கிறவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தடை இருந்தும், கரூர் மாவட்டத்தில் இருந்து திருட்டுத்தனமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் இரவு நேரத்தில் மணல் அள்ளி செல்லப்படுகிறது. அப்போது, சில லாரிகளில் தார்ப்பாய் போடப்படாததால், டுவீலர்கள் மற்றும் நடந்து செல்கிறவர்கள், காற்றில் பறந்து செல்லும் மணல் துகளால் அவதிப்படுகின்றனர். இதனால், டுவீலர்களில் செல்கிறவர்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரங்களில் கூலிங்கிளாஸ் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இருந்து கூலிங்கிளாஸ் கண்ணாடிகள் விற்பனைக்காக தமிழகம் கொண்டு வரப்படுகின்றன. குறைந்தபட்சம், 50 முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை டுவீலர்களில் செல்கிறவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X