பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் வந்த 79 பேருக்கு பரிசோதனை: சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, கரூர் வந்த, 79 பேருக்கு ரயில்வே ஸ்டேஷனில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 64 பேர், மும்பையிலிருந்து, ரயிலில் முன்பதிவு செய்து கொண்டு, கரூர் வந்து கொண்டிருப்பதாக ரயில்வே போலீசார் மூலம், மாவட்ட சுகாதார துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.டி.ஓ., சந்தியா தலைமையில், நகராட்சி நல அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் ஆறு மருத்துவ குழுக்களைச் சேர்ந்த, 30 பேர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர். நேற்று மாலை, 5:20 மணிக்கு, மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த, 64 பேர், ஆந்திரா, தெலுங்கானா, டில்லி மற்றும் தமிழக எல்லை பகுதியில் இருந்து வந்த, 15 பேர் உள்பட, 79 பேருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என, பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, யாருக்கும் எந்த நோய் தொற்றும் இல்லாததால், அரசு பஸ் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதுகுறித்து, நகராட்சி நல அலுவலர் ஸ்ரீ பிரியா கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து ரயிலில், தமிழகம் வருகிறவர்களுக்கு, மாநிலம் முழுவதும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், மும்பை உள்ளிட்ட, வட மாநில பகுதி மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் இருந்து வந்த, 79 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லை. காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவு ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என, வந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வந்தவர்களின் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை சேகரித்து, அந்தந்த பகுதியில் உள்ள, சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X