பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு: நிறுவனங்கள் ஆதரவு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாடு முழுவதும், இன்று காலை, 7:00 மணியிலிருந்து, இரவு, 9:00 மணி வரை சுய ஊரடங்கு நடைமுறையை பின்பற்றும்படி, மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு, தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று ஒரு நாள் தொழிற்சாலைகள், கடைகள், பஸ்கள் இயங்காது. கரூர் மாவட்டத்தில், மளிகை கடைகள், காய்கறி மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், அரிசி மண்டிகள், உணவகம், ஜவுளி நிறுவனம் உட்பட, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும். மேலும், 300 லாரிகளுக்கு மேல் நிறுத்தி வைக்கப்படும். மேலும், அரசு போக்குவரத்து கழகத்தில் கரூர் மண்டலத்தில், 267 பஸ்கள், 68 தனியார் பஸ்கள், 98 மினி பஸ்கள், 1,289 ஆட்டோ உட்பட ஏராளமான வாகனங்கள் இயங்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X