பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு; ஜெட் வேகத்தில் உருளை கிழங்கு விலை

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து வருகிறது.
நாட்டில், உருளை கிழங்கு உற்பத்தியில் உத்தரபிரதேசம், மேற்கு வங்க மாநிலம் முன்னணியில் உள்ளது. தவிர, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், உருளை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மலைப்பகுதிகளில், உருளை கிழங்கு சாகுபடி நடக்கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு அதிகளவில் தமிழகத்துக்கு வந்தது. இதனால், ஒரு கிலோ, 15 ரூபாய் வரை விற்றது. ஆனால், மார்ச் மாத துவக்கத்தில் உத்தர பிரதேசத்தில் பெய்த மழை காரணமாக, உருளை கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் நீரில் முழ்கியது. இதனால், வரத்து குறைந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் தற்போது அறுவடை தொடங்கிய நிலையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக, உருளை கிழங்கு வரத்து, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு மேலும் குறைந்துள்ளது. இதனால், விலை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, உருளை கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டு இதே சீசனில் ஒரு கிலோ உருளை கிழங்கு, ஐந்து ரூபாய் முதல், எட்டு ரூபாயாக இருந்தது. தற்போது வரத்து குறைவு காரணமாக, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X