பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு உபகரணம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: 'தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2018, 2019ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு, 6,000 ரூபாய் மதிப்பிலும், வெள்ளி வென்றவர்களுக்கு, 4,000 ரூபாய் மதிப்பிலும், வெண்கலம் பெற்றவர்களுக்கு, 2,000 ரூபாய் மதிப்பிலும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். தகுதிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தினை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம், ஏப்.,2க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X