சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலப்பிரச்னையில் தாக்குதல்: தந்தை, மகன் கைது

Added : மார் 22, 2020
Share
Advertisement

குளித்தலை: நிலப்பிரச்னையில், தம்பியை தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பிச்சம்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 40, இவருடைய அண்ணன் முருகன், 45. இருவருக்கும் இடையே, சொத்து சம்பந்தமாக குளித்தலை கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, சித்தலவாய் -பிச்சம்பட்டி நெடுஞ்சாலையில், சங்கர் வரும்போது, அவரை வழிமறித்த முருகன், 45, அவருடைய மகன்கள் கந்தசாமி, 23, மகாமுனி, 21, ஆகியோர், வழக்கை வாபஸ் பெறச் சொல்லி, தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சங்கர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவர் மீதும் மாயனூர் போலீசார் வழக்குப் பதிந்து, முருகன், மகாமுனியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X