சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு மனைவிக்கு மிரட்டல்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் வரதட்சணை கேட்டு மிரட்டியதாக இளம்பெண்ணின் கணவர் உள்பட, நான்கு பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர், ராயனூர் அன்பு நகரை சேர்ந்த மெய்யப்பன் மகள் சித்ரா; 26. இவருக்கும், புலியூர் பகுதியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, 29, என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது, 25 பவுன் தங்க நகை, இரண்டு லட்ச ரூபாய் வரதட்சணையாக, தீபன் சக்கரவர்த்திக்கு, மெய்யப்பன் கொடுத்துள்ளார். தீபன் சக்கரவர்த்தி, நைஜீரியா நாட்டில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு, சித்ரா, தீபன் சக்கரவர்த்தியுடன், நைஜீரியா சென்று விட்டார். சில மாதங்களுக்கு முன், பிரசவத்துக்காக சித்ரா கரூர் வந்தார். தற்போது, ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் மேலும், 50 பவுன் நகை கேட்டு, தீபன் சக்கரவர்த்தி, அவரது தந்தை தங்கவேல், 79, தாய் வளர்மதி, 58, தங்கை விஜயஸ்ரீ, 26, ஆகியோர், சித்ராவை மிரட்டியுள்ளனர். இது குறித்து, சித்ரா போலீசில் புகார் செய்தார். கரூர் மகளிர் போலீசார், நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X