பொது செய்தி

இந்தியா

இத்தாலி விமான நிலையத்தில் தவித்த இந்திய மாணவர்கள் மீட்பு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியில் அதிகமான பாதிப்புகளும், உயிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நோய்க்கு எதிராக இத்தாலி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், அங்கு படித்து வந்த இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், தாயகம் திரும்புவதற்காக விமான நிலையத்தியேலே பல நாட்களாக தவித்தனர். தங்களை மீட்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு,கோரிக்கை வைத்தனர்.latest tamil news


இந்நிலையில் நேற்று சனிக்கிழமை புறப்பட்ட சிறப்பு ஏர் இந்திய விமானம், ரோம் விமான நிலையத்தில் தவித்த 263 இந்திய மாணவர்களை அழைத்துக்கொண்டு இன்று(மார்ச்-22) காலை 10 மணிக்கு டில்லி விமான நிலையம் வந்தது. இவர்கள் அனைவரும், தெர்மல் சோதனை முடிந்த பிறகு டில்லியில் உள்ள சாவ்லா ஏரியாவில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


ஏற்கனவே, இத்தாலியில் இருந்து அழைத்து வரப்பட்ட 215 இந்தியர்கள் மார்ச்-15ல் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என இந்தோ திபெத்திய போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
22-மார்-202021:45:47 IST Report Abuse
Perumal Why these carriers of Virus are brought back to India.They can get medical facilities there itself. Unnecessarily we are made to suffer because of them.India could have been in safer mode had they not brought these people.Govt should rethink on this.
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202020:10:14 IST Report Abuse
நக்கல் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் இங்கு இருக்கும் அனைவரும் ஒன்றை உணரவேண்டும்... நமக்கு எங்காவது இருக்கும்போது ஒரு பிரச்சனை என்றால் ஒரு இந்தியானோ அல்லது இந்திய அரசோதான் நமக்கு உதவ முன் வரும்... மற்ற நாடுகளில் இருந்து இந்தியா நிச்சயமாக ஒரு வித்யாசனமான நாடு.. அதற்கு காரணம் சனாதன தர்மம்... கஷ்டப்படுபவர்களை பார்த்தால் உதவி செய்யவேண்டும் இல்லையென்றால் அது பாவம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.... அதற்கு ஜாதி மதம் என்ற பாகுபாடு கிடையாது.... இனியாவது அனைவரும் இந்தியாவை நேசியுங்கள், பொறுப்பாக பேசுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
s vinayak - chennai,இந்தியா
22-மார்-202017:34:04 IST Report Abuse
s vinayak திரு. மோடி மற்றும் அவரது அரசு இந்தியர்களுக்கான அரசு. மானுட சேவைதான் அவர்களுடைய முதல் பணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X