பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸை கொல்லும் சோப்: எப்படி இது சாத்தியம்? 25 வினாடிகள் போதும்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
soap, coronavirus, hand, கொரோனாவைரஸ், சோப்,

சென்னை: 'கொரோனா' வைரஸை, சாதாரண சோப் மற்றும் தண்ணீரால் அழிக்கமுடியும்.உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது.கொரோனா வைரஸை அழிக்க, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுமாறு டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். எப்படி கை கழுவ வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம், 25 வினாடி கை கழுவ வேண்டும் என அறிவுரை கூறுகின்றனர். அப்படி சோப்பில் என்ன தான் சக்தி இருக்கிறது? ஆம்... நிச்சயமாக உண்டு என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


latest tamil news





latest tamil news




latest tamil news



சோப்பால் கொரோனா வைரஸை எப்படி முற்றிலும் அழிக்கலாம் என்பதை விளக்கி கூறும் வீடியோ, சமூக வலைதளத்தில்பரவி வருகிறது. இந்த விழிப்புணர்வு வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் கோள வடிவில், மேற்பரப்பில் ஆணி போன்ற அமைப்புடன் உள்ளது. இவை புரதம் மற்றும் கொழுப்பை கொண்டுள்ளன. சோப்பில், இரு வகை மூலக்கூறுகள் உள்ளன. ஒன்று தண்ணீருடனும், மற்றொன்று கொழுப்புடன் தனித்தனியாக ஈர்க்கப்படுகிறது.
கையை சோப் போட்டு கழுவும்போது, சோப்பில் உள்ள மூலக்கூறுகளால், வைரஸ் மேற்பகுதியில் உள்ள கொழுப்பு படிவு முற்றிலும் அழிக்கப்படுகிறது. முட்கள் போன்ற இந்த அமைப்பு சிதைக்கப்படுவதால், நமது திசுக்களில் கொரோனாவால் ஊடுருவ முடியாது.இதை செயற்கை முறையில், சோப், எண்ணெய் பயன்படுத்தி விளக்கி கூறுகிறது வீடியோ.

அழுக்குகளை நீக்கும் மூலக்கூறுகளில் சோப்பில் உள்ள கொழுப்பு, ஆயிலை தண்ணீரில் முழுவதும் கரைய வைக்கிறது.தொடர்ந்து சோப்பை நாம் பயன்படுத்தி வரும்போது, வைரசின் மூலக்கூறுகளை சிதைத்து, அழிக்கிறது. கொரோனா வைரசை அகற்ற சோப் நமது கைகளில் 25 வினாடிகள் இருக்க வேண்டும். இதன் பின்னர் தான் கைகளை கழுவ வேண்டும். சோப்பானது 22 நொடிகளில், வைரசின் வெளிப்புர கொழுப்பு அடுக்கில் ஊடுருவி உள்ளே சென்று, புரத மூலக்கூறுகளை உடைத்து, வைரசை கொல்கிறது.வீடியோவில் , வைரசை கொல்ல சோப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்கப்பட்டது.
மேலும், நாம் வலது கையை பயன்படுத்துபவர்கள் என்றால், பொருட்களை எடுக்கவும், கைகளை பயன்படுத்தவும் இடது கையை பயன்படுத்தலாம். ஏனென்றால், அந்த கையை நாம் முகத்தையும், மூக்கையும் தொட மாட்டோம். எனவே, சாதாரண சோப், வைரசை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், உங்கள் கைகளை சோப்பால் கழுவுங்கள்! கொரோனா நெருங்காமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-மார்-202016:38:49 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan வாட் அபௌட் சனிடெசெர் ? sanitiser , காரண வைரஸ்சை கொல்லும்மா ?
Rate this:
Share this comment
Cancel
tshajahan - Vellore,இந்தியா
22-மார்-202016:19:32 IST Report Abuse
tshajahan One more valued information from Dinamalar to prevent CORONOVIRUS infection
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
22-மார்-202015:57:08 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வைரசு - காங்கிரசு சோப்பு - பிஜேபி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X