பொது செய்தி

இந்தியா

கொரோனா எதிரொலி: 75 மாவட்டங்களை முடக்க முடிவு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
JanataCurfew, Covid_19india, COVID19outbreak, CoronaUpdatesInIndia, CoronaVirus, LockDown, கொரோனா, வைரஸ், முடக்க முடிவு, 75 மாவட்டங்கள், கோவிட்19,

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்களை முடக்க முடிவுசெய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி தொற்றுநோயான 'கொரோனா வைரஸ்' இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று (மார்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் முடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 341 பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டுவிட்டர் பக்கத்தில், மார்ச் 31 வரை பயணிகள் போக்குவரத்தை குறைக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என பதிவிட்டுள்ளார்.


மாநிலங்கள் அறிவிப்பு


இதன்படி, மஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரகண்ட், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்க மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
22-மார்-202022:33:41 IST Report Abuse
Krishna Very Good Required Though Tough But Essential Services-ItemsHousehold, Medical etc Must be Ensured by Rulers at Normal Price All Deadlines Must be Extended Till Complete Recovery of Corona Virus Infections
Rate this:
Cancel
22-மார்-202019:38:31 IST Report Abuse
ஆப்பு பீதியா? எனக்கா?
Rate this:
Cancel
22-மார்-202017:50:49 IST Report Abuse
chandran எல்லாரையும் முதலில் வீட்டில் உட்கார வைத்து அதற்கப்புறம் நடவடிக்கை மேற்கொண்டு யாரையும் வீட்டைவிட்டு வெளியில் வராமல் செய்து நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டும் கண்டுபிடித்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தனிமைப்படுத்தி முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது நாம் அனைவரும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X