பொது செய்தி

இந்தியா

கை தட்டல் ஒலித்தது; நாடே அதிர்ந்தது

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் இன்று (மார்ச் 22) மாலை 5 மணி அளவில் அவரவர் வீடுகளின் முன்பாக சேவை செய்யும் டாக்டர்களுக்கு கை தட்டி மக்கள் நன்றி தெரிவித்தனர். பலரும் வீதிகளிலும், மொட்டை மாடிகளிலும் நின்ற படி கை தட்டினர் , மணி ஒலித்தனர். இந்த காட்சி உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது.latest tamil newsகொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கால் இன்று (22 ம் தேதி ) நாடு முழுவதும் பெரும் அமைதி ஏற்பட்டது. மக்கள் தானாகவே முன்வந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், உள்ளிட்ட பெருநகரங்கள் வெறிச்சோடின. இந்தியா முழுவதும் பெரும் அளவில் ஆதரவு கிடைத்தது.


latest tamil newsஅரசியல் கட்சிகள் நடத்தும் பந்த் என்றால் வன்முறைகள் ஏதும் இருக்கும். ஆனால் இது மக்கள் நல்வாழ்வு தொடர்பான விஷயம் என்பதால் எந்த ஒரு இடத்திலும் சிறு அளவில் கூட வன்முறை இல்லாமல் மக்களின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்றது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-மார்-202013:28:17 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியர்கள் அனைவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகிவிட்டது மார்ச் 22 2020
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-மார்-202013:27:23 IST Report Abuse
இந்தியன் kumar கைதட்டல் மணியோசை எழுப்பி நன்றி சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-மார்-202022:43:59 IST Report Abuse
மலரின் மகள் இதை ஒரு நன்றி விசுவாசமாகவும், மருத்துவர்களுக்கு தங்களின் அன்பை சொல்வதாகவும் எடுத்து கொண்டிருக்கலாம். யார் சொன்னார்கள் என்று பார்த்தா அரசியல் செய்து ஒதுங்கி கொள்வது. என்ன சொன்னார்கள் எதற்காக சொன்னார்கள் என்று உணர்ந்து அந்த நல்ல எண்ணத்திற்கு ஆதரவு நல்கிட சில கைத்தட்டல்களால் யாரும் குறைந்து விடப்போவதில்லை. சீனாவின் எபிசென்டர் வைரஸ் பகுதிக்கே சென்று நம்மவர்களை மீட்டு அழைத்து வந்த குழுவினருக்கு பாராட்டுதலைகளை கூட சொல்வதற்கு மதமும், அரசியலும் குறுக்கே இருக்கிறதா சிலருக்கு. மனித நேயம் அனைவருக்கும் தேவை. அது மருத்தவம் சார்ந்தவர்களுக்கும் சேவை துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இருக்கவேண்டும், மருத்துவ சேவை இலவசமாக வேண்டும் என்று எண்ணுவோர் சிறிதளவாவது மனம் எண்ணி பார்த்திருக்கவேண்டாமா. மருத்துவர்களின் சேவை ராணுவ வீரர்களின் சேவையை விட பலமடங்கு உயர்ந்தது என்று சொல்வார்கள் அறிஞர்கள். ராணுவ வீரர்கள் கூட புறமுதுகிட்டு ஓடியம் தஞ்சமும் அடைந்திருக்க்கிறார்கள், மருத்துவ சேவை அப்படி அல்ல. நோயாளிகளை காக்கவேண்டியதே நோக்கம் வேறேத்தும் இல்லை. இறைவா நீ குணப்படுத்து. அதை எங்கள் மூலம் நிறைவேற்று. உன் மீது பாரம் ஏற்றி அனைத்து முயற்சிகளும் செய்கிறோம். எங்கள் பிரார்த்தனையை மட்டுமே கேள், நோயாளிகளின் ஜாதகத்தை பார்த்து அவர்களை சிகிச்சையின் பலனில் இருந்து ஒதுக்கி விடாதே என்பதை மனதில் சுமந்தே அதில் ஏற்படும் சுய தாக்குதல்களை அறிந்தே மருத்துவம் சேவை செய்யப்படுவதை தயவு செய்து அறியுங்கள். அது ஒரு கூட்டு பிரார்த்தனை. தனி தவம் அல்ல. ஒருங்கிணைந்து செய்யப்படும் விரதபலன்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X