பொது செய்தி

இந்தியா

ஒரு நாளைக்கு 10,000 பேரை சோதிக்கும் திறன் இருக்கிறது

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: நமது நாட்டில் ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திறன் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.


latest tamil newsஇந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், கொரோனா பாதித்த 75 மாவட்டங்களில், அவசரகால சேவைகளை தவிர அனைத்து சேவைகளையும் நிறுத்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது, என்றார். தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியதாவது:latest tamil newsவெளிநாட்டில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்துவதே எளிதான முறை. வைரஸ் காற்றில் இல்லை, நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. நோய் பற்றி புரிந்து கொள்வது அவசியமாகும். குளர் போன்ற காய்ச்சலை உணரும் 80 சதவீத மக்கள் அதிலிருந்து குணமடைவார்கள். ஆனால், இருமல், சளி, காய்ச்சலை உணரும் 20 சதவீத மக்கள் மருத்துவமனைக்கு சென்று சோதிக்கலாம். அதில் 5 சதவீதம் பேருக்கு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தியுள்ளோம்.


latest tamil newsநாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரை சோதிக்கும் அளவிற்கான திறன் எங்களிடம் உள்ளது. அதாவது வாரத்திற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேரை சோதனை நடத்தலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படும். நமது நாட்டில் 111 அரசு மற்றும் தனியார் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. ஹரியானா மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 800 படுக்கைகள் ஒதுக்கப்படும். இதுவரை 60 தனியார் ஆய்வகங்கள் சோதனை நடத்துவதற்காக ஒப்புதல் கேட்டுள்ளன. அவற்றிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
23-மார்-202010:26:34 IST Report Abuse
தமிழ் வேந்தன் நாங்க ஆட்சிக்கு வந்த அப்படியே அறுத்து தள்ளிடுவோம் ன்னு பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்ததின் விளைவு
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
23-மார்-202009:43:55 IST Report Abuse
Appan உலகளவில் ஜெர்மனி இந்த வைரஸை சரியாக கையாள்கிறது..ஜெர்மனியின் மக்கள் தொகை 8 .2 கோடி..அவர்களிடம் தினம் 24000 பேரை டெஸ்ட் செய்ய வசதி உள்ளது.. அவர்கள் சின்ன சிம்ப்டம் இருந்தாலும் டெஸ்ட் செய்து முன்னெச்சிரிக்கையா மருத்துவம் பார்க்கிறார்கள்..இத்தாலியில் இது போல் இல்லை..இதனால் தான் அதிகம் சாவு என்கிறார்கள்.இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி..அதாவது இத்தாலியை விட 15 .85 மடங்கு அதிகம் அதாவது 380400 பேரை டெஸ்ட் செய்யும் வசதி தேவை..அதை விட்டு 10000 பேர் தான் டெஸ்ட் செய்ய முடியுமென்றால்..நினைத்து பாருங்கள்..இத்தாலி மாதிரி நடந்தால் என்ன ஆகும் ..?> மக்கள் கொத்து கொத்தாக சாவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Arun - Manila,பிலிப்பைன்ஸ்
23-மார்-202008:21:58 IST Report Abuse
Arun 120 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு நாளைக்கு 10000 பேரை மட்டுமே சோதிக்க முடியுமா? 29+7 மாநிலங்களில், ஒரு மாநிலத்திற்கு வெறும் 277 பேரை ஒருநாளைக்கு சோதிக்க முடியும். அப்படியென்றால் 120000 பேருக்கு ஒரே ஒரு கருவி மட்டுமே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X