முடங்குகிறது டில்லி : முதல்வர் கெஜ்ரிவால்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை டில்லி முழுவதும் முடக்கப்படுகிறது என மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.latest tamil news
நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி சுய ஊரடங்கை நடத்தும் படி மக்களை கேட்டுக்கொண்டார். இதனையடுத்துஎதிர்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் சுய ஊரடங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்தன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை டில்லி முடக்கப் படும் என டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறிய தாவது:நாளை (23 ம் தேதி) காலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இக்கால கட்டங்களில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் டில்லிக்கு வருவது31ம் தேதி வரையில் தடை செய்யப்பட்டுள்ளது.அத்தியாவசிய பணிகளுக்கான போக்குவரத்தை தவிர தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் , இ-ரிக்ஷாக்கள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.


latest tamil newsஅனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202011:01:20 IST Report Abuse
krishna Indha paya moorga vottu vangi jaichu eppodhum sahin bagh salai mariyal desa virodhigal kurithu vaai thirakka mattan.Ivan hindhu edhiri vottukkaga nammai mudhugil kutthum thirudan.Tahir Huessin ivan valarthu vitta rowdy.
Rate this:
Share this comment
Cancel
23-மார்-202010:38:13 IST Report Abuse
ஆப்பு நீங்களாவது ஒரு 10 நாளைக்கி முன்னாடி முடக்க நடவடிக்கை எடுத்திருக்கலாமே... படிச்சவராச்சே...
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-மார்-202009:59:34 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தொடர்ந்து நாட்டுக்கு எதிரான கூட்டத்தாகி நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ள உங்கள் தீய எண்ணத்தை வன்மையாக கண்டிக்கிறோம் தேச விரோதிகளின் ஆதரவில் நீங்கள் வாழ வேண்டுமா இல்லை நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆதரவில் வாழ வேண்டுமா முடிவெடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X