சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்; பாதுகாப்பு படையினர் 17 பேர் பலி

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், நக்சலைட்கள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக கூறப்பட்ட, பாதுகாப்பு படையினர், 17 பேரின் உடல்கள், நேற்று வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட வனப்பகுதியில், நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், இந்த பகுதியில், சி.ஆர்.பி.எப்., நக்சல் தடுப்பு படை, சத்தீஸ்கர் போலீசார் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 17 வீரர்கள் காயமடைந்ததாக, பாதுகாப்பு படையினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், 17 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டது.



latest tamil news




இந்நிலையில், சண்டை முடிந்த பின், நக்சலைட்டுகள் தப்பி ஓடினர். அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட, 17 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நக்சலைட் தாக்குதலில், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. தாக்குதல் நடந்த இடத்திலிருந்து, நக்சலைட்கள் வீட்டுச் சென்ற ஏராளமான துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். தப்பி ஓடிய நக்சலைட்டுகளை பிடிக்கும் பணியில், ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
23-மார்-202010:25:27 IST Report Abuse
பாமரன் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்ட பாராட்டு பத்திரம் செய்தி வடிவில் வந்த 24 மணி நேரத்தில் இது நடந்துள்ளது. மேலும் ஏகப்பட்ட குளறுபடிகள். இறந்தவர் பற்றி நேற்றே மற்ற ஊடகங்களில் வந்துவிட்டது. இறந்தவர்களில் பெரும்பாலோனோர் தீவிரவதத்திலிருந்து திரும்ப வந்து படையில் சேர்ந்து இருந்தவர்கள். ஏகப்பட்ட ஆயுதங்களை நக்சலைட்டுகள் எடுத்து சென்றதாக செய்தி... இங்கு உல்டாவா வருது... என்னதான் நடக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
23-மார்-202009:46:47 IST Report Abuse
Thirumal Kumaresan என்ன பெரிய ராணுவம் இருந்து என்ன பிரயோசனம்,இவர்களை வேரோடு அளிக்க வேண்டாமா
Rate this:
Share this comment
Cancel
RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா
23-மார்-202009:41:12 IST Report Abuse
RAMAMOORTHI S நக்ஸலைட்டுகளை விமானம் மூலம் குண்டுமழை பொழிந்து ஒழிக்கனும். நமது படை வீரர்களை காப்பதற்கு இது ஒன்றுதான் வழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X