பொது செய்தி

இந்தியா

31ம் தேதி வரை நாடு முழுதும் பயணிகள் ரயில்கள் ... நிறுத்தம்!

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (7+ 27)
Share
Advertisement

புதுடில்லி:'கொரோனா' வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து, நாடு முழுதும், அனைத்து பயணியர் ரயில்களும், மார்ச், 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன; மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.latest tamil news
கொரோனாவை எதிர்கொள்ளும் போராட்டத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது நாடு. வைரஸ் இருப்பது ஊர்ஜிதம் ஆன 75 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டன. இங்கு வாழும் மக்கள் யாரும் வெளியே போக முடியாது. வெளியார் வரவும் முடியாது. சென்னை, காஞ்சி, ஈரோடு இந்த 75 ல் அடங்கி முடங்கும். 2 கோடி பேருக்கு மேல் வாழும் டெல்லி மாநகரும் மூடப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்காக ஆஸ்பத்திரிகள், சிகிச்சை கருவிகள் தயார் செய்யப்படுகின்றன. ரயில் சர்வீஸ் அடியோடு ரத்தானது. மரணம் அதிகரிக்கும் என்பதால் வதந்தி பரப்புவோருக்கு வலையும்

நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கெரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நம் நாட்டிலும், கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே, நம் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒருவருக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாத, சமுதாய நோய் தொற்று என்ற அபாய நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. நேற்று, நாடு முழுதும் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, நேற்று, 370 ஆக அதிகரித்தது. இதையடுத்து, கொரோனா பாதிப்பை தடுக்க, ரயில்வே நிர்வாகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறியதாவது:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே பயணியர் ரயில் சேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மார்ச், 31 வரை, மெயில், எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில்கள் உள்ளிட்ட, அனைத்து விதமான பயணியர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. மார்ச், 22ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு முன் புறப்பட்ட ரயில்கள், அவை சென்றடைய வேண்டிய கடைசி இடம் வரை பயணிக்கும். இந்த ரயில்களில் பயணிப்போருக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்ட காலத்தில் பயணிக்க, டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், டிக்கெட் தொகை முழுவதையும் திரும்ப பெறலாம். வரும், ஜூன், 21 வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதால், எந்தவித அவசரமின்றி பொறுமையாக கட்டணத்தை திரும்ப பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


75 மாவட்டங்களில் ஊடரங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலர் உள்ளிட்டோர், நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, மார்ச், 31 வரை ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள, 75 மாவட்டங்களின் எல்லைக்கு, 'சீல்' வைக்கப்படுவதாகவும், இந்த மாவட்டங்களில் மக்கள் ஊரடங்கை, இந்த மாத இறுதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் ஊரடங்குதமிழகத்தில் நீடிப்புமக்கள் ஊரடங்கு நடவடிக்கை, இன்று காலை, 5:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:பிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு, பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், நேற்று இரவு, 9:00 மணிக்கு நிறைவடைய இருந்தது. இந்நிலையில், மக்கள் நலன் கருதி, இன்று காலை, 5:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற, எந்த தடையும் இல்லை. தொடர் ஊரடங்கிற்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பலி எண்ணிக்கை7 ஆக அதிகரிப்பு

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால், டில்லி, கர்நாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர், ஏற்கனவே இறந்துள்ளனர். இந்நிலையில், மேற்காசிய நாடான கத்தாரிலிருந்து வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 31 வயது நபர், கொரோனா பாதிப்புக்காக, பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், நேற்று பலியானார். மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 63 வயது நபர், நேற்று இறந்தார். இவருக்கு ஏற்கனவே, இதயம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்பு இருந்ததாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம், சூரத்தில், கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த, 69 வயது பெண், நேற்று இறந்தார். இதையடுத்து, நம் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை, ஏழாக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும், மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை உட்பட மூன்று மாவட்டங்கள் முடக்கம்தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த,
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ௭௫ மாவட்டங்களை தனிமைப்படுத்த, நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த மாவட்டங்களின் எல்லைகளுக்கு, 'சீல்' வைக்க உத்தரவிட்டதோடு, மக்கள் ஊரடங்கும், வரும், ௩௧ வரை நீடிக்கும் என, தெரிவித்தது.

இந்த, 75 மாவட்டங்கள் பட்டியலில், தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மூன்று மாவட்டங்களிலும், ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்துக்கு, ௩௧ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஊரடங்கும் அமலில் இருக்கும். அத்துடன், மூன்று மாவட்டங்களிலும், ௩௧ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும்.

இந்த மூன்று மாவட்ட மக்கள், பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியாதபடியும், பிற மாவட்ட மக்கள், இந்த மாவட்டங்களுக்கு வர முடியாதபடியும், எல்லைகள், 'சீல்' வைக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (7+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Musthafa - Cuddalore,இந்தியா
23-மார்-202011:09:53 IST Report Abuse
Musthafa ஊரடங்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு கண்டிப்பாக தேவை, மக்கள் இங்கும் அங்குமாக அலைமோதுகின்றனர் இதன் மூலமே தொற்று பரவ கூடும் மற்றும் வேண்டாத பீதியும் நிகழ்கிறது
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
23-மார்-202009:53:48 IST Report Abuse
svs இத்தாலியில் அறுபது வயதானவர்களுக்கு நோய் தாக்குதல் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை கிடையாது ....வசதி இல்லை ....இங்கும் அதுபோல் நிலைமை வராமல் தற்காப்பு நடவடிக்கை தேவை ....
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
23-மார்-202007:31:05 IST Report Abuse
svs ஏழை மக்கள் இந்த வியாதியிலிருந்து தப்ப சுலப வழியுள்ளது ...." படிகார நீரை, கிருமி நாசினியாக பயன்படுத்தி கை கழுவினால் போதும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்,'' என, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் ஜெகஜோதி பாண்டியன் கூறினார்" .....கடலை மாவும் பயன்படுத்தலாம் ......வீடு வாசலில் மாட்டு சாணம் தெளித்தால் கிருமிகள் ஓழியும்...... முன்பெல்லாம் சலூன் கடையில் படிகாரம்தான் பயன்படுத்துவார்கள் ..... டெட்டால் விலையை இப்பொது மருந்து கடையில் பல மடங்கு கூடுதல் விலையேற்றம் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X