பொது செய்தி

இந்தியா

முழு ஒத்துழைப்பு!பிரதமர் மோடியின் அழைப்புக்கு மக்கள் ஆதரவு

Updated : மார் 24, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நேற்று, 14 மணிநேரம், 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்க, பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கினர். ரயில்கள், பஸ்கள் உட்பட எந்த வாகன போக்குவரத்தும் இல்லாததால், நாடு முழுதும், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. சீனாவில் உருவான, கொரோனா வைரஸ், இப்போது, உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது. இந்தியாவில்,

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நேற்று, 14 மணிநேரம், 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்க, பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கினர். ரயில்கள், பஸ்கள் உட்பட எந்த வாகன போக்குவரத்தும் இல்லாததால், நாடு முழுதும், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.latest tamil news


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஞாயிறன்று 14 மணிநேரம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால், மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து மாவட்டங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.சீனாவில் உருவான, கொரோனா வைரஸ், இப்போது, உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது. இந்தியாவில், கொரோனாவுக்கு இதுவரை, 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏழு பேர் இறந்துள்ளனர்.கொரோனா பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கடந்த, 19ம் தேதி இரவு, 'டிவி' மற்றும் வானொலி' வாயிலாக, நாட்டு மக்களிடம், பிரதமர், மோடி பேசினார்.அப்போது, 'கொரோனா பரவலை தடுக்க, மக்கள் தனிமையில் இருக்கவும், சமூக விலக்கலையும் பழகிக் கொள்ள வேண்டும். 'இதன் சோதனை முயற்சியாக, 22ம் தேதி காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருக்க வேண்டும்' என, கூறினார்.


latest tamil news

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் வெறிச்சோடி காணப்பட்ட மார்க்கெட்

பிரதமரின், மக்கள் ஊரடங்கு அறிவிப்புக்கு, மாநில அரசுகள், பல்வேறு சமூக அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கங்கள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு கொடுத்தனர்.பல மாநில அரசுகள், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவித்தன. நாடு முழுதும் பயணியர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. புறநகர் ரயில்கள் மட்டும், குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு மக்கள் ஊரடங்கு துவங்கியது. பிரதமரின் அழைப்பை ஏற்று, வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கினர். மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து ஆகியவை இல்லாமல், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர, வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. தலைநகர் டில்லியில், கடைகள் திறக்கப்படவில்லை. சாலையில், வெகு சில வாகனங்கள் மட்டுமே தென்பட்டன.


மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்கள், விமான நிலை யம், சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன. தமிழகத்திலும், மாநிலம் முழுதும் நேற்று ஸ்தம்பித்தது. சாலைகள், ரயில், பஸ் நிலையங்கள் அனைத்தும்,வெறிச்சோடி கிடந்தன. நாடு முழுதும், வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

முன்னதாக, மக்கள் ஊரடங்கு துவங்குவதற்கு முன், 'டுவிட்டரில்' பிரதமர் மோடி பதிவிட்டு இருந்த செய்தியில் கூறியிருந்ததாவது:மக்கள் ஊரடங்கில், நாம் அனைவரும் பங்கேற்போம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு, மிகப்பெரிய பலத்தை இது வழங்கும். இப்போது நாம் எடுக்கும் முடிவுகள், வரவிருக்கும் காலங்களில் உதவும். வீட்டிற்குள்ளேயே தங்கியிருங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.இவ்வாறு பிரதமர் கூறியிருந்தார்.

தனிமையில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும் என, மக்களை, பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தினர். தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு, இன்று காலை, 5:00 மணி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.மஹாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், பீஹார் ஆகிய மாநிலங்களில், பல பகுதிகள், வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலில் இருந்த மக்களை காப்பாற்றும் பணியில், தன்னலமற்று ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், ஆட்டோ டிரைவர்கள். ஊடகங்களில் பணிபுரிவோர் உட்பட பலருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, நேற்று மாலை, 5:00 மணி முதல், 5:05 மணி வரை, வீடுகளின் வாசல், மொட்டை மாடி, பால்கனிகளில் நின்று, மக்கள் கைகளை தட்டி, மணியடித்து, சங்கு ஊதி, நன்றி தெரிவித்தனர்.


பொதுமக்களுக்கு நன்றி'

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றிய பொதுமக்களுக்கு நன்றி. மக்கள் ஊடரங்கிற்கு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இவ்வாறு, அதில் பிரதமர் கூறியுள்ளார்.


போலீசாருக்கு ரோஜாதலைநகர் டில்லியில், சிலர் நேற்று காலை, வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 'உங்கள் பாதுகாப்புக்காக தான் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. நாங்கள் சொல்வதை கேளுங்கள்' எனக் கூறி, ரோஜா பூ கொடுத்து, வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதே போல, ஊரடங்கிலும் சுறுசுறுப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், சிலர் ரோஜா பூ கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202021:06:56 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் எல்லாமே நல்லா போயி கடைசியா காமெடியில் முடிந்து. நோக்கமே கூட்டம் கூடாம தனிமை படுத்திக்கனும் என்பபதே?கைதட்டுறேன்னு சங்கிகள் வீட்டுபாத்திரத்தை அடித்து நசுக்கி கொரோனா வைரஸ் மாதிரி ஆக்கிட்டானுவ. பத்தாதற்கு வடநாட்டில் சங்கிகள் கூட்டமா ஊர்வலம் வேற....அதான் பிரதமர் இன்னைக்கு மக்கள் கொரோனாவை சீரியசாவே எடுத்துக்கலைன்னு வருத்தப் பட்டுள்ளார்.
Rate this:
Cancel
23-மார்-202019:53:29 IST Report Abuse
ஆப்பு மோடி ஐயா ஊட்டுலே அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப் பாடு இல்லியாம். தட்டுப்பாடு இருக்குறவங்க அவருக்கு ஒரு ட்வீட் அனுப்புனா அடுத்த குரியர்ல சாமான்கள் வீடு தேடி வரும். ஏழைகளின் தெய்வம்.
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
23-மார்-202013:06:02 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இந்த ஒரு நாள் என்பது முன்னோட்டமாகவே தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X