சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கோத்தர் இன முதல் பெண் டாக்டர் வைத்தீஸ்வரி!

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோத்தர் இன முதல் பெண் டாக்டர் வைத்தீஸ்வரி!

நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும், மொத்தம், 2,000 பேர் கொண்ட, கோத்தர் இனத்திலிருந்து, முதல் பெண் டாக்டராக உருவாகியுள்ள வைத்தீஸ்வரி, அவரை உருவாக்கிய தாய் குந்திதேவி:

என் கணவர் பெயர் கம்பட்டீஸ்வரன். கணவர் இறந்து விட்டார். எங்களுக்கு இரண்டு பெண்கள், பையன் உள்ளனர். நாங்கள் படிக்கவில்லை. அதனால், எங்கள் பிள்ளைகளையாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என விரும்பினோம்.என் கணவருக்கு, இவளை எப்படியாவது, டாக்டராக ஆக்கி விட வேண்டும் என்ற மன உறுதி இருந்தது.

அதனால் தான், இவளுக்கு வைத்தீஸ்வரி என பெயர் வைத்தார். இதற்காக, கடினமாக உழைத்தார். மாரடைப்பு ஏற்பட்டு, திடீரென இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது, 28.கணவர் இறந்த போது, மூன்று குழந்தைகளுக்கும் விபரம் தெரியாத வயசு. இவர்களை எப்படி வளர்த்து கரை சேர்க்கப் போகிறோம் என்ற கவலை என்னை ஆழ்த்தியது. எங்களுக்கு சொந்தமாக கொஞ்சம் நிலம் இருந்தது.

அதில், தேயிலை பயிரிட்டு, அதில் கிடைத்த வருமானத்தில், இவளை டாக்டராக ஆக்கியுள்ளேன். எங்கள் இனத்திலேயே, முதல் டாக்டர் இவள் தான். மூத்த மகள், 'அக்ரி'யில் பட்டம் பெற்றுள்ளார். மகன், இன்ஜினியரிங் முடித்துள்ளான். எப்படியோ கஷ்டப்பட்டு, பாடுபட்டு, என் பிள்ளைகள் மூன்று பேரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டேன்.என் பிள்ளைகளுக்கு அறிவுரை இது தான். 'உதவி கிடைக்காமல் தவிக்கிறவங்களுக்கு உதவி செய்யுங்க. ஒன்றிரண்டு பேரையாவது, உங்கள் செலவில் படிக்க வையுங்க. வசதி இல்லாதவங்களுக்கு, இலவசமாக மருத்துவம் பாருங்க' என, சொல்லிஉள்ளேன்!

மகள் வைத்தீஸ்வரி: எங்கள் இனத்தின், முதல் பெண் டாக்டர் நான் தான் என்பது, பிறர் சொல்லித் தான் எனக்கு தெரியும். பள்ளியில் படிக்கும் போதே, டாக்டர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு படித்தேன். 2011ல், திருச்சி மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது; 2017ல் முடித்தேன்.அப்போது, 'நீட்' தேர்வு கிடையாது; 'மெரிட்' மட்டும் தான். அதனால் எனக்கு இடம் கிடைத்தது. எங்கள் குடும்பத்தினர், எங்கள் தாய்மாமன்மார் ஆதரவு இல்லை என்றால், என்னால் டாக்டர் ஆகி இருக்க முடியாது. மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வை எழுதி, அதிலும் வெற்றி பெற்று, படித்து வருகிறேன்.

சிறுநீரகத் துறை நிபுணர் ஆக படிக்கிறேன். முடித்ததும், அம்மா ஆசைப்படி, எங்கள் இன மக்களுக்கும், ஏழை மக்களுக்கும், இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்; உதவ வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan Iyer - Bangalore,இந்தியா
23-மார்-202019:17:27 IST Report Abuse
Kannan Iyer வாழ்க வளமுடன் உங்களின் சேவை ஆற்றும் மனப்பாங்குக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
23-மார்-202018:02:42 IST Report Abuse
krishnamurthy vazhthukkal
Rate this:
Share this comment
Cancel
Hari - chennai,இந்தியா
23-மார்-202009:53:08 IST Report Abuse
Hari இவர்களை நினைக்கும்போது மனம் மகிழ்கிறது ,வாழ்த்துக்கள்.சகோதரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X